
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-6 – பினாங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
16 வினாடிகள் கொண்ட வீடியோவில், பாயான் லெப்பாஸில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், ஆடவர் ஒருவர் பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வெள்ளை நிறக் காரின் அருகே அவர் பெண்ணை தள்ளி விட்டு அடிக்கிறார்.
பாதுகாவலர் ஒருவர் தலையிட முயன்றாலும், தாக்குதல் தொடருகிறது.
பின்னர் அந்த ஆடவர், பொருளொன்றை பெண்ணை நோக்கி தூக்கி எறிந்து, மீண்டும் தாக்குகிறார்.
இச்சம்பவத்தை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பெறப்படவில்லை என தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் Abdul Rozak Muhammad கூறினார்.
பொது இடத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



