Latestமலேசியா

லங்காவியில் நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 350 வீடுகளின் பிரதிநிதிகளுடன் சார்ல்ஸ் சன்டியாகோ சந்திப்பு

சைபர் ஜெயா, நவ 29 – லங்காவியில் நீர் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட 350 வீடுகளைளைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளுடன் லங்காவி கிசாப், சுங்கை ராயா தோட்டத்தின் பொது மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பில் “SPAN” எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சன்டியாகோ கலந்து கொண்டார். நேற்று நடைபெற்ற அந்த சந்திப்பில் தாமான் சுங்கை ராயா, கம்போங் பெலாங்கா பெச்சா, கம்போங் தெலுக் மற்றும் கம்போங் கிசாப் ஆகிய இடங்களில் குடியிருக்கும் 350 வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் எதிர்நோக்கியிருக்கும் தண்ணீர் பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கியிருக்கும் நீர் நெருக்கடி தொடர்பில் சமூக வலைத்தளத்திலும் இதற்கு முன் தகவல்கள் வெளியாகின.

அந்த சந்திப்பு கூட்டத்தில் தேசிய நீர் சேவை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் கெடா மாநில நீர் விநியோகிப்பு நிறுவனமான “Syarikat Air Darul Aman Sdn Bhd” (SADA) ஆகியவற்றின் பிரிதிநிதிகளும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் குறுகிய கால, மிதமான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான தீர்வுக்கான திட்டமும் விவாதிக்கப்பட்டது. கெடா நீர் விநியோகிப்பு நிறுவனம் தெரிவித்த குறுகியகால திட்டத்தின் கீழ் தற்போது 4 லோரிகளில் நீர் விநியோகிக்கும் நடைமுறையை ஏழு லோரிகளாக அதிகரிப்பதும் அடங்கும். முக்கியமான இடங்களில் நிறுத்திவைக்கப்படும் நீர் டாங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது , நீர் விநியோகிப்பு தொடர்பில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளும் அதிகாரிகளை நியமிப்பது மற்றும் நீர் விநியோகிப்பு தொடர்பான கால அட்டவணையை ஏற்பாடு செய்வதும் அடங்கும். மேலும் நிரந்தர தீர்வு அடிப்படையில் நீண்ட கால திட்டங்களும் வரையப்பட்டதாக தேசிய நீர் சேவை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!