
கோலாலம்பூர், டிசம்பர்-3 – நிதி மோசடிகளுக்கு வங்கிகளின் அலட்சியமே காரணமாக இருந்தது கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.
சட்டம் 593 என சுருக்கமாக அழைக்கப்படும் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வங்கிப் பணப்பரிமாற்றங்களை முறையாகக் கண்காணிக்காமல் அலட்சியம் காட்டினால், அவை இழப்பீடு வழங்கியே ஆக வேண்டுமென்றார் அவர்.
பிரிட்டனில் கூட அச்சட்டம் அமுலில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
வங்கிகளின் கவனக்குறைவால் வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பணம் மாயமானால், வங்கிகளைப் பொறுப்பேற்கச் செய்ய முடியுமா என மக்களவையில் பிரதமருக்கான இன்றையக் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு, டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.