Latestஇந்தியா

இந்திய கோடீஸ்வரரான சுப்ரதா ராய் காலமானார்

புதுடில்லி, நவ 16 – இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய தொழில் அதிபர்களில் ஒருவரும் கோடிஸ்வரருமான சுப்ரதா ராய் (Subrata Roy) மாரடைப்பினால் தமது 75 ஆவது வயதில் இறந்தார் என அவரது சஹாரா (Sahara) குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் தங்கள் முதலீடுகளை எப்படி மீட்கப்போதிறோம் என்ற அச்சத்தில் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் உள்ளனர். மும்பையில் மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமையன்று அவர் இறந்தார்.

பீகாரில் 1948 இல் பிறந்த ராய், 1978 இல் சஹாரா நிறுவனத்தை 2,000 ரூபாய் அல்லது
24 அமெரிக்க டாலர் முதலீட்டுடன் வர்த்தகத்தை தொடங்கினார். நிதி, வீட்டுவசதி, உற்பத்தி மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளில் வர்த்கத்தை விரிவுபடுத்தி பல பில்லியன் டாலர் நிறுவனமாக தமது நிறுவனத்தை ராய் மேம்படுத்தினார். தனது முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கத் தவறியதால்
2014 ஆம் ஆண்டு ராய் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து அவர் வெளியேறினார். தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று ராய், கூறிவந்தார். அதோடு தமது சஹாரா நிறுவனம் எப்போதும் ஏழைகள் மற்றும் முக்கியமாக கிராமப்புற முதலீட்டாளர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் வலியுறுத்தி வந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!