
கோலாலம்பூர், ஜனவரி-6 – பாலியல் வன்முறை வழக்கில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 40 வயது சமய ஆசிரியருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6 பிரம்படிகளும் விதித்துள்ளது.
அவர், 11 வயது சிறுவனை கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை வங்சா மாஜூவில் உள்ள சமயப் பள்ளியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.
2 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவற்றை ஏக காலத்தில் அல்லாமல், தொடர்ச்சியாக அதாவது முழு 8 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையிலிருக்கும் காலத்தில் அவர் ஆலோசகச் சேவையைப் பெற வேண்டும் என்றும், விடுதலைக்குப் பின் 2 ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனும் மனநல ஆலோசனை பெற வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.



