
கோலாலம்பூர், ஜன 2 – பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பொறுப்பிலிருந்து பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் பதவி விலகலை அறிவித்திருக்கும் நிலையில் அக்கூட்டணியின் இடைக்காலத் தலைவராக MIPP கட்சியின் தலைவர் புனிதன் நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியின் விதிமுறைப்படி முஹிடின்- னின் பதவி விலகலை உச்சமன்றம் ஏற்கும் பட்சத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் இடம்பெற்றுள்ள Presidential Council கூடி எனப்படும் தலைமைத்துவ மன்றம் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவெடுக்கும்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமைக்கு பெர்சத்துவா பாஸ்-சா எனும் போட்டி நிலவும் பட்சத்தில் தகுதியான ஒருவரை தீர யோசித்து முடிவெடுக்க சில காலம் பிடிக்கலாம்.
அதனால் தற்போதைக்கு இடைக்கால தலைவரை நியமிக்கும் எண்ணத்தில் தலைமைத்துவ மன்றம் இருப்பதாக அவ்வட்டாரம் கூறுகிறது.
அப்போது பாஸ் அல்லது பெர்சத்து-வை சாராத நடுநிலையான ஒருவரை இடைக்கால தலைவராக நியமிக்கும் பட்சத்தில் அதற்கு MIPP கட்சியின் தலைவர் புனிதனை நியமிக்க அக்கட்சிகள் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
கெராக்கான் கட்சி தன்னை முன்னிலைபடுத்த முயல்வதாகவும் ஆனால் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள் புனிதனை விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் முஹிடின் ஜனவரி 5 நாடு திரும்பியப் பின் தலைமைத்துவ மன்றம் கூடும் என நம்பப்படுகிறது.



