
லண்டன், ஜூலை 3 – லிவர்புல் கிளப்பின் காற்பந்து நட்சத்திரமான
போர்த்துகலைச் சேர்ந்த 28 வயது டியோகோ ஜோதா ( Diogo Jota ) ஸ்பெய்னில் Zamora மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். தனது Lamborghini கார் விபத்துக்குள்ளாகி வெடித்து தீப்பற்றிய சம்பவத்தில் அவர் இறந்தார்.
இந்த விபத்தில் தனது சகோதரரும் போர்த்துகல் குழுவின் மற்றொரு காற்பந்து விளையாட்டாளருமான 26 வயதுடைய அன்ரே ( Andre ) வும் இறந்தார். இன்று விடியற்காலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்ததை போர்த்துகல் காற்பந்து சங்கத்தின் தலைவர் Pedro pronca உறுதிப்படுத்தினார்.
Diogo Jota இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் சிறு வயதிலிருந்து தனது தோழியாக இருந்த மூன்று பிள்ளைகளுக்கு தாயான Rute Cardoso என்பவரை திருமணம் செய்து கொண்டார். லிவர்புல் கிளப்பின் முன்னணி விளையாட்டாளருமான Diogo Jota போர்த்துகல் காற்பாந்து குழுவுக்கு 50 க்கும் மேற்பட்ட அனைத்துலக ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவரது மறைவு மிகப்பெரிய அதிர்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக போர்த்துகல் காற்பந்து சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.