Latestமலேசியா

குழந்தை கடத்தல் குற்றத்திற்காக பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை; ரி.ம 90,000 அபராதம்

கோலாலம்பூர், ஜன 20- 13 மாத ஆண் குழந்தையை கடத்தியது மற்றும் 2020 ஆம் ஆண்டில் அதன் பிறப்பு ஆவணங்களை போலியாக தயாரித்த இரண்டு குற்றச்சாட்டுகளில் முன்னாள் கல்லூரி நிர்வாக உதவியாளருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 90,000 ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 40 வயதான நூருல் பைசான் அஹ்மாட் அஸ்ரிக்கு நீதிபதி அஸுரா அல்வி இந்த தண்டனையை விதித்தார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவு தெரியும்வரை சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு அவர் அனுமதித்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

குழந்தையின் உயிரியல் தாயிடமிருந்து குழந்தையை சாட்சி ஒருவரிடம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒப்படைத்தார். இது ஆட்கடத்தல் எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 இன், 14ஆவது விதியை தெளிவாகன மீறியிருக்கிறது. இது உயிரியல் தாய்க்கு உதவுவதாகவும், பணத்தை ஈடுபடுத்தவில்லை என்றும் நூருல் பைசான் கூறியது வெறும் மறுப்பு என்றும் நீதிபதி தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஜாலான் கிளாங் லாமாவில் உள்ள தாமான் டேசா மருத்துவமனையில் குழந்தையை கடத்தியதாக நூருல் பைசான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய பதிவகத்தின் கோலாலம்பூர் கிளையில், குழந்தையின் பெயரில், தவறான தேசிய பதிவுத் துறை (JPN) பிறப்புப் பதிவுப் படிவத்தை, இணைப்புகளுடன், தெரிந்தே பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!