
கோலாலம்பூர் 31 – 11 ஆண்டுகளுக்கு முன் மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் காணாமல் போன மர்மத்தை தீர்க்கும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளது.
‘கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்’ என்ற போக்குவரத்து அமைச்சின் ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம், இந்தியப் பெருங்கடலில் 5,800 சதுர மைல் பரப்பில் தேடுதல் பணிகளை நேற்று முதல் மேற்கொண்டு வருகிறது.
அதிநவீன தானியங்கி நீர்மூழ்கிக் கருவிகள் மற்றும் சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 6,000 மீட்டர் ஆழம் வரை விமானம் தேடப்படுகிறது.
இந்நடவடிக்கை 55 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014- மார்ச் 8-ஆம் தேதி கோலாலாம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் காணாமல் போன MH370 விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர்.
விமானம் என்னவானது, அதிலிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று வரை தீர்க்கமான பதிலில்லை.
உலக வான் போக்குவரத்து வரலாற்றின் மாபெரும் மர்மங்களில் ஒன்றாக இது நீடிக்கிறது.



