ரஷ்ய இராணுவ விமானம் நடுவானில் இரண்டாக பிளந்து வெடித்துச் சிதறியது; 7 பேர் மரணம்

மோஸ்கோவ், டிசம்பர் 17-மோஸ்கோவின் வடகிழக்கில் நீர்த்தேக்கத்திற்கு அருகே, ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானமான Antonov An-22 இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என ரஷ்ய தற்காப்பு அமைச்சு கூறியது.
விபத்து நடந்தபோது பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு விமானம் சோதனைப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.
அப்போது, சோவியத் யூனியன் காலத்து அவ்விமானம் வானில் கடுமையான கட்டமைப்பு சேதத்தை சந்தித்து இரண்டாக பிளந்ததை, வைரலான வீடியோ காட்டுகிறது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
என்றாலும், மிகப் பழைய விமானம் என்பதாலும் அதன் கட்டமைப்பு அழுத்தத்தாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அனைத்துலக வான் போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
1965-ல் இயங்கத் தொடங்கிய இந்த விமானம், உலகின் மிகப்பெரிய turboprop போக்குவரத்து விமானமாகும்.
நீண்ட காலமாக ரஷ்ய இராணுவ தளவாட நடவடிக்கைகளில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.



