
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – நாட்டில் தற்போது 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆக அதிகமாக வங்காளதேசத் தொழிலாளர்கள் 803,322 பேராக உள்ளனர்.
543, 514 பேருடன் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியத் தொழிலாளர்களும், 332, 712 பேருடன் நேப்பாளத் தொழிலாளர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
173,630 பேருடன் மியன்மார் நாட்டவர்கள் நான்காவது இடத்திலும் 106,929 பேருடன் இந்தியத் தொழிலாளர்கள் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களை முறையே பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தாய்லாந்து, வியட்நாம், இலங்கைத் தொழிலாளர்கள் வகிக்கின்றனர்.
கடைசி 5 இடங்களை கம்போடியா, சீனா, லாவோஸ், உஸ்பெகிஸ்தான், கசக்ஸ்தான் நாடுகளின் தொழிலாளர்கள் பிடித்துள்ளனர்.
இதில் உஸ்பெகிஸ்தான் தொழிலாளர்களின் எண்ணிக்கை 12, கசக்ஸ்தான் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 3 மட்டுமே என, ஸ்டீவன் சிம் மக்களவையில் தெரிவித்தார்.