
கோலாலம்பூர், டிசம்பர்-5 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கோலாலம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நிலைகுலையச் செய்தது.
Bulatan Pahang, உலக வாணிப மையம் அருகேயுள்ள Jalan Tun Razak சாலை உள்ளிட்ட பல இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன;
தலைநகரின் பல முக்கியச் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் நிலைக்குத்தின.
சில இடங்களில் இடுப்பளவுக்கு வெள்ள நீர் மட்டம் இருந்ததும், வாகனமோட்டிகள் சாலைகளிலேயே சிக்கிக் கொண்டதும், சமூக வலைத்தளவாசிகள் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிந்தன.
Titiwangsa MRT நிலையத்தில் பல கார்கள் வெள்ள நீரில் மூழ்கிய வீடியோக்களும் பரவியுள்ளன.
Masjid Jamek ஆற்றிலும் வெள்ள நீர்மட்டம் உயர்ந்து, வெள்ள அபாய சைரன் ஒலியும் எழுப்பப்பட்டது.
இவ்வேளையில், கனழையால் அம்பாங், கோம்பாக் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகளில் 2 நிலச்சரிவு சம்பவங்களும் பதிவாகின.
உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்களைப் பாதுகாப்புக் கருதி, தீயணைப்பு – மீட்புத் துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர்.



