
கோலாலம்பூர், நவம்பர் 3,
கடந்த அக்டோபர் மாதம், செந்தூல் ஜாலான் ஈப்போ அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரான 54 வயது சந்திரனின் மரணம் கொலை என போலிஸ் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்கு DPPயின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக போலிஸ் கூறியுள்ளது.
பணியில் இருந்த சமயம், அங்குள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட விவாதத்தில் சந்திரன் தாக்கப்பட்டார். மரணமடைவதற்கு முன் போலிஸ் புகார் செய்திருந்த சந்திரன், மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். பின்னர்தான் அவர் இறந்துள்ளார்.
இதனிடையே குற்றம் சுமத்தப்பட்ட 32 வயது ஆடவனிடமிருந்து துப்பாக்கி வடிவிலான லைட்டரையும் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.



