பங்சார் புத்ரா ரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் குப்பைகள் மேலிருந்து வீசப்படும் சம்பவம்; வலுக்கும் கண்டனம்

கோலாலம்பூர், அக்டோபர் 7 – அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் அதிகம் எதிர்நோக்குவதே குப்பைகள் முறையாக வீசப்படாத பிரச்சனையைத்தான்.
படிக்கட்டுகளில் குப்பைகளை வைத்தால், வாகன நிறுத்துமிடத்தில் வைத்தல், மற்ற வீடுகளின் முன் வைத்தல் எனக் குப்பைகளை பொறுப்பற்ற முறையில் அங்கங்கே வைத்து செல்லப்படுவது அவ்வப்போது அமபலமாகி வருகிறது.
இந்த பிரச்சனை அடுத்த கட்டமாக மேலும் மோசமாகியுள்ளது. சமூக அக்கறை இல்லாத சில குடியிறுப்பாளர்கள் மேல் மேடிகளிலிருந்து குப்பைகளை கீழே வீசும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
அப்படி ஒரு சம்பவம், பங்சாரிலுள்ள புத்ரா ரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் நடக்க, அது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
ஜன்னலிலிருந்து குப்பை வீசப்படுவதைக் காட்டும் இக்காணொளியைப் பார்த்து, வலைத்தளவாசிகள் -அதிருப்தி அடைந்துள்ள்னர்.
கண்டிப்பாக இச்செயல்களைச் செய்யக் கூடாது என குப்பைத் தொட்டிகள் வைத்திருப்பதும், ஏற்றுக்கொள்ள முடியாத செயலைச் செய்பவர்களை ‘பின்னோக்கிய மனநிலை’ கொண்டவர் என்று முத்திரை குத்த வேண்டும் என்று வலைத்தளவாசிகள் பலவாறாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே, மேலிருந்து குப்பைகளையும் பொருட்களையும் வீசும் சம்பவங்களால், காயமடைந்தல் மற்றும் மரணமடைதல் போன்ற விபத்துகளும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.