Latestமலேசியா

இரா. முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராஹிம்: சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், பிப் 16 – எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதியுள்ள ‘அன்வார் இப்ராஹிம்: சிறை முதல் பிரதமர் வரை’ எனும் நூல் நேற்று வியாழக்கிழமை வெற்றிகரமாக வெளியீடு கண்டுள்ளது.

பிரதமரின் இளமைக் காலம் தொடங்கி அரசியல், சமூகப் போராட்டம், பொதுத்தேர்தல் வியூகம் என அவரின் வாழ்க்கைப் பயணம் இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இருமுறை சிறை வாசம் கண்ட மலேசியாவின் 10-வது பிரதமரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வாழ்க்கையில் எதிர்நோக்கிய போராட்டங்களை நூலாக வெளியிட வேண்டும் என்ற தமக்கு ஏற்பட்ட ஆர்வமே இந்நூல் எழுதியதற்கான காரணம் என்கிறார் எழுத்தாளர் இரா. முத்தரசன்.

இதனிடையே, வளர்ந்து வரும் அரசியல்வாதிகளுக்கு இந்நூல் சிறந்த உதாரணமாக அமையும் என்று இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கி நூலை வெளியிட்டு சிறப்பித்த மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ரோயல் சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்ததிற்கான பிரதமர் துறை துணையமைச்சர் குலசேகரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ராவின் தலைவருமான பிரபாகரன், பிரதமரின் தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்கான சிறப்பு அதிகாரியான ஆர். சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!