
கோலாலம்பூர், ஜனவரி 17 – மீண்டும் வணக்கம் மலேசியா போன்ற அச்சு அசல்போல் உருவாக்கப்பட்ட மேலும் சில முகநூல் பக்கங்கள் உலாவ தொடங்கியுள்ளன.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தொடங்கி கடிகாரம், Galaxy Buds, JBL speaker போன்ற பொருட்களை விற்பனை செய்யவதாகக் கூறி, பொய்யான செய்திகள் இந்தப் பக்கங்கள் பரப்பி வருகின்றன.
இந்தச் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றும், வணக்கம் மலேசியா செய்தி ஊடகத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நான்கு போலி முகநூல் கணக்குகள் திறக்கப்பட்டு, வணக்கம் மலேசியா செய்தி வடிவமைப்பின் தோற்றுத்துடன், அதன் நம்பகத்தன்மையைப் பயன்படுத்தி பொய்யான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுக் குறித்து வணக்கம் மலேசியாவும் புகார் அளித்திருக்கும் நிலையில், பொதுமக்களும் இதுபோன்று போலியான செய்திகளையும் பக்கங்களையும் கண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இச்செய்திகள் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின், “வணக்கம் மலேசியா” சமூக ஊடகத்தளத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலேயே தகவல்களை உறுதிசெய்யவும்.
Vanakkam Malaysia எனும் பெயரில் காணப்படும் முகநூல் பக்கமே எங்களின் ஒரே உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வத் தளமாகும்.
ஆக, பொதுமக்கள் இச்செய்திகளைக் கவனமாக அணுகி, எந்தவிதமான போலியான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.