
கூச்சிங், அக்டோபர்-31,
சரவாக்கில் கடந்த வாரம் தாபுவான் ஜெயா (Tabuan Jaya) பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளம் பெண், கூச்சிங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில், காருக்குள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நேற்று மதியம் ஒன்றரை மணியளவில், பொது மக்களில் ஒருவரின் தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
கார் உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால் தீயணைப்பு வீரர்கள் காரைத் திறக்க உதவினர்.
அப்போது, 20 வயதிலான அப்பெண், ஓட்டுநர் இருக்கையில் சடலமாக கிடந்தார்.
அம்மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையென்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்றாலும், மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, சடலம் சவப்பரிசோதனைக்காக சரவாக் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



