
கேரளா, டிசம்பர் 11 – சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால், தேவஸ்தானம் நடை திறக்கும் நேரத்தை 45 நிமிடங்களுக்கு நீட்டித்துள்ளது.இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக இணைய முன்பதிவு மற்றும் நேரடி பதிவு வாயிலாக, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இணைய முன்பதிவில் தினமும் 70 பேர் மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், நேரடி பதிவில் 5,000 பேர் தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிட்டியிருந்தது.
இந்த புதிய நடவடிக்கையின் மூலம், தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் வருகைப் புரிவதால், பக்தர்களுக்கு இலகுவாக தேவஸ்தானம் இத்தகைய முடிவை முன்னெடுத்துள்ளது.
மேலும் கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் வலுப்படுத்தியுள்ள நிலையில், பக்தர்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான தரிசன அனுபவத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



