Latestமலேசியா

மக்கள் பயத்தில் முக கவசங்களை வாங்க தேவையில்லை – Perantim தலைவர் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், டிசம்பர் 21: கோவிட்-19 நோய்த் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பயத்தில் முகக் கவசங்களை வாங்கி குவிக்க வேண்டாம் என மலேசிய மருத்துவ சங்கம், Perantim தலைவர் ஜொஹாரி அபு காசிம் வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயத்தில் முகக் கவசம், மருத்துவ உடைகள், சானிடைசர்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட உயர்தர மருத்துவ பொருள்களின் தேவைகளை பூர்த்தி செய்ய Perantim எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக வணக்கம் மலேசியாவிடம் அளித்த பேட்டியில் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே பொதுமக்கள் வாங்கும் மருத்துவ பொருட்கள் அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பொருளாக இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் நடப்பு சூழலைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!