
இஸ்கந்தர் புத்ரி , ஜன 27 – சிங்கப்பூரின் இரண்டாவது நுழைவு மையம் வழியாக நாட்டிற்குள் 12,000 ரிங்கிட் மதிப்புடைய கடல் வெள்ளரியை கடத்த முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டது.
நேற்று மாலை மணி 5.06 அளவில் Sultan Abu Bakar குடிநுழைவு, சுங்க மற்றும் தடுப்பு மையத்தில் நுழைந்த வாகனத்தில் மலேசிய தடுப்பு மற்றும் சோதனை சேவைகள் துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின்போது அந்த கடல் வெள்ளரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வாகனத்தில் 120 கிலோ கடல் வெள்ளரிகள் பாலிஸ்டிரின்
( Polystyrene ) பெட்டிகளுக்குள் இருந்ததை அந்த வாகன ஓட்டுநர் தெரிவிக்கவில்லை.
SUV வாகனத்தில் அந்த கடல் வெள்ளரிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக மாநில குடிநுழைவு ,சுங்க தடுப்பு மையத்தின் இயக்குநர் எடி புத்ரா முகமட் யூசோப் (Edie Putra Md Yusof ) தெரிவித்தார்.
இந்த கடல் வெள்ளரி ஒருவகை மருத்துவ குணங்களுக்காக கடத்தப்படுகின்றன. இறக்குமதி அனுமதியின்றி கடல் வெள்ளரியை கடத்தி வந்ததற்காக அந்த Suv வாகன ஓட்டுனர் கைது செய்ப்பட்டதோடு அந்த வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.