Latest

பெருவின் மாச்சு பிச்சுவுக்கு அருகே ரயில் விபத்து ஒருவர் மரணம் 40 பேர் காயம்

லீமா, டிச 31 – பெருவின் ஐ.நா பாரம்பரிய சின்னமாக திகழும் Machu Picchu பழங்கால கோட்டைக்கான வழிதடத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் மரணம் அடைந்த வேளையில் ,குறைந்தது 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர் இரண்டு ரயில்களில் ஒன்றின் நடத்துனர் என்று பிரபலமான இன்கா கோட்டைக்கு மிக அருகில் உள்ள நகரமான கஸ்கோவில் ( Cusco) வைச்சேர்ந்த வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தண்டவாளங்களுக்கு அருகில் கிடப்பதையும், இரண்டு சேதமடைந்த ரயில் இயந்திரங்கள் அருகில் செயலற்ற நிலையில் இருப்பதையும் RPP தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் காட்டப்பட்டது.

நேரடி சாலை வசதி இல்லாத தொலைதூர ஒதுக்குப்புறமான ஆண்டியன் ( Andean ) பகுதியில் ஒரு டஜன் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 1983 முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான இந்த பழங்கால கோட்டை வளாகம் ஒவ்வொரு நாளும் சராசரி சுமார் 4,500 பார்வையாளர்களைப் பெறுகிறது, அவர்களில் பலர் வெளிநாட்டினர் என்று பெரு சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!