Latestமலேசியா

பயான் லெபாஸில் மதுபோதையில் காரோட்டி நான்கு வாகனங்களை மோதிய ஆடவர் தடுத்து வைப்பு

ஜோர்ஜ் டவுன் , செப் 2 – மதுபோதையில் தனது Honda காரை ஓட்டிச்சென்றபோது நான்கு வாகனங்களை மோதியது தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

பாயான் லெப்பாஸ், Jalan Kenariயில் நேற்றிரவு மணி 11.55 அளவில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 55 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக பினாங்கு மேற்கு வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சசாலி அடாம் ( Sazalee Adam ) தெரிவித்தார்.

அந்த நபர் ஒரு புரோட்டோன் X70 மற்றும் Devine Mercy தேவாலயத்தின் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பொது கார்களையும் மோதியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் பாயான் லெப்பாஸ் போக்குவரத்து போலீஸ்காரர்கள் அந்த சந்தேக பேர்வழியை கைது செய்தனர்.

ஆயர் ஈத்தாம், Desa Gemilangகை சேர்ந்த அந்த ஆடவர் கைது செய்யப்பட்டபோது அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.

அதோடு இதற்கு முன் குற்றப் பின்னணி எதனையும் அந்த ஆடவர் கொண்டிருக்கவில்லையென Sazalee Adam தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!