Latestமலேசியா

சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கிய 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா – பாப்பா ராயுடு

கோலாலம்பூர், டிச 16-சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்த பத்து தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அதிகாரப்பூர்வ நிலப்பட்டா கிடைப்பதில் சிக்கலை எதிர்நோக்கி வந்த பத்து பள்ளிகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலப்பாட்டாவுடன் அது தொடர்பான ஆவணங்களும் வழங்கப்பட்டன.

கோலாலங்காட் மாவட்டத்தில் உள்ள தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி ஜெஞ்ஜாரோம் தமிழ்ப்பள்ளி, சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, ஆகிய தமிழ்ப்பள்ளிகள் உள்பட பி.ஜே.எஸ் 1 தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி, பெர்சியாரான் ராஜா முடா மூசா தமிழ்ப்பள்ளி, சீபீல்டு தோட்டத் தமிழ்பள்ளி, செர்டாங் தமிழ்ப்பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, மற்றும் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி ஆகிய 10 பள்ளிகளுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆவண ஒப்படைப்பு பள்ளியின் சட்டபூர்வ நில உரிமையை உறுதிப்படுத்துவதுடன், எதிர்கால கட்டிட மேம்பாடு, கல்வி வசதிகள் விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக அமையும் என வீ.பாப்பா ராயுடு தெரிவித்தார்.

இதற்கிடையே சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் எட்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா பெறுவதில் பல்வேறு வகையில் மோசமான சிக்கல்கள் நிலவி வருகிறது என்றாலும் அப்பள்ளிகளுக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கை அதன் நடவடிக்கை குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!