
கோலாலம்பூர், அக் 3 – பெரிய கண்ணாடி ஜாடிகளில் மூசாங் பூனைகள், நரிகள் மற்றும் பெரிய சிலந்திகள் போன்ற வன விலங்குகளை பாதுகாத்து வைத்திருந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
36 வயதுடையை அந்த ஆடவர் சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கியிலுள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹிசிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுடன் இணைந்து சிலாங்கூர் பெர்ஹிலித்தான் அதிகாரிகள் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் பெரிய மான் கொம்புகள் மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு கிரிஸ் பிடியும் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
பெர்ஹிலிட்டன் அதிகாரிகள் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கப்பட்ட சிலந்தி, காட்டுப் பூனை மற்றும் நரி போன்ற பிற விலங்குகளையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து, மூன்று கண்ணாடி ஜாடிகள், மற்றம் வன விலங்குகவை வைப்பதற்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் பல உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் உயிருடன் மற்றும் பதப்படுத்திய நிலையில் வைக்கப்பட்டிருந்த வனவிலங்குகளை அதிகாரிகள் கண்டனர். அவற்றில் இரண்டு ஆமைகள், ஒரு முதலை ஆகியவவையும் இருந்தன .



