
குவாலா லிப்பிஸ், செப்டம்பர் 18 – குவாலா லிப்பிஸ் ஃபெல்டா (Felda) பகுதியிலுள்ள காவல் நிலையக் கட்டிடத்தை டிரைலர் ஒன்று மோதியதில், அங்கு பணியில் இருந்த 23 வயதான போலீஸ் உதவி அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கம்போங் சுங்கை தெமாவிலிருந்து குவாந்தான் நோக்கி சென்ற டிரைலர் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து, காவல் நிலையத்தை மோதியதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போலீஸ் உதவி அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்று லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் (Ismail Man) தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததோடு, காவல் நிலையத்தின் கூரை மற்றும் சுவர்களும் இடிந்து சரிந்தன.
விபத்தில் காயமடைந்த டிரைலர் ஓட்டுநர் மற்றும் போலீஸ் உதவி அதிகாரி இருவரும் குவாலா லிப்பிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.