Latestமலேசியா

‘Turun Anwar’ பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பபட்டதா? ஙா- வின் கூற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி

கோலாலம்பூர் , ஜூலை 28- அன்வார் பதவி விலக வேண்டும் என்ற Turun Anwar பேரணிக்குப் பிறகு 20 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது குறித்து வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming நேற்று வெளியிட்ட அறிக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்களில் பலர் ஏற்க மறுத்ததால் மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

வாய்மொழி பதில் அமர்வின் போது எழுந்து நின்று குறுக்கிட்ட Pendang நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான பெரிக்காத்தான நேசனல் கூட்டணி உறுப்பினர் Awang Hashim , இந்த அறிக்கை வெளியிடப்பட்டதற்கான விளக்கத்தையும் ஆதாரங்களையும் காட்டுமாறு Nga Kor MIngகை கேட்டுக் கொண்டார்.

பேரணியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் ஒரு போத்தல் மினரல் நீர் மட்டுமே கொண்டு வந்ததால், 20 டன் வரை குப்பைகளை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று Awang சுட்டிக்காட்டினார்.

முதலில் இதற்கான ஆதாரத்தை நிருபித்தால் அமைச்சர் ஏமாற்றவில்லை என்று தாம் கூறமுடியும் என அவர் தெரிவித்தார்.

பின்னர் Nga தனது அறிக்கையை ஆதரித்து, திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகத்திடமிருந்து உண்மைகள் பெறப்பட்டதாகக் கூறினார்.

அரசாங்கம் பேரணியை வரவேற்றதாகவும், பங்கேற்பாளர்கள் தூய்மையைப் பராமரிக்க வேண்டும் என்று எச்சரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குப்பைகளை சுத்தம் செய்யும் பாஸ் தொண்டு பிரிவு குழு இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. நான் நன்றி கூறுகிறேன்.

இருப்பினும், தலைநகரை சுற்றியுள்ள சோகோ மற்றும் டத்தாரான் மெர்டேகா போன்ற இடங்களைச் சுற்றி 20 டன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்று Nga Kor Ming  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!