
இஸ்தான்புல் , நவ 19 – சமூக ஊடக தளமான X நேற்று செயல் இழப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்ததாக செயலிழப்பு கண்காணிப்பு தளமான Downdetector.com தெரிவித்துள்ளது.மலேசியா நேரப்படி இரவு 7.18 மணி முதல் இரவு 8.18 மணி வரைக்கிடையே X பயனர்கள் தளத்தில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தரவு காட்டுகிறது என்று துருக்கியின் அனடோலு ( Anadolu ) செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கிளவுட் ப்ளேரில் ( Cloudflare ) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த செயலிழப்பு ஏற்பட்டது. இதுவரை பயனீட்டாளர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்ட போதிலும் X தளம் எந்தவொரு பதில் அல்லது அறிக்கையை வெளியிடவில்லை.



