
கோலாலம்பூர், டிசம்பர் 18-அடுத்தாண்டு 10 முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு இருக்காது என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது அமைச்சரவையின் முடிவு என, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளருமான அவர் சொன்னார்.
அரசாங்கம், இந்த முடிவை நடைமுறைப்படுத்த RM500 மில்லியன் செலவிட வேண்டி வரும்.
என்றாலும், இதன் மூலம், பயணிகளின் சுமையை குறைத்து, பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்றார் அவர்.
இது, மக்கள் நலனுக்காக மடானி அரசின் உறுதியான முயற்சியை காட்டுவதாக அவர் சொன்னார்.
2026-ல் டோல் உயர்வு இல்லாததால், பயணிகள் நிம்மதியடையலாம்.



