
பாரீஸ், செப்டம்பர்-6 – கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான உச்ச விலையாக ஆகஸ்ட் மாதத்தில் உலக உணவு விலை உயர்ந்திருப்பதாக, ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பான FAO தெரிவித்துள்ளது.
FAO விலைக் குறியீடு ஆகஸ்டில் 130.1 புள்ளிகளில் இருந்தது; ஜூலையை விட மிகச் சிறிய உயர்வாக இருந்தாலும், கடந்தாண்டை விட இது 6.9% அதிகமாகும்.
காய்கறி எண்ணெய் விலை 1.4% உயர்ந்து மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக பதிவானது.
மாமிச விலையோ 0.6% உயர்ந்து சாதனை நிலையை எட்டியது; குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவில் மாட்டிறைச்சி தேவையால்…
சீனி விலையும் சிறியளவு உயர்ந்துள்ளது.
என்ற போதிலும் தானிய விலைகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிந்துள்ளன; கோதுமை விலை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவில் அதிக விளைச்சலால் குறைந்தது.
அரிசி விலை இந்தியாவில் ஏற்பட்ட விலை சரிவு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவால் குறைந்தது.
பால் சார்ந்த பொருட்களும் ஆசியாவில் குறைந்த தேவையால் 1.3% வீழ்ச்சியடைந்ததாக FAO அறிக்கைக் கூறுகிறது.