
கோலாலம்பூர், செப் 10 – டோஹாவின் (Doha) Legtaifiya பகுதியில் உள்ள ஹமாஸ் (Hamas) தலைவரின் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை டோஹாவிலுள்ள மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் கட்டாரில் (Qatar) இருக்கும் அனைத்து மலேசியர்களும் விழிப்புடன் இருப்பதோடு அப்பகுதியிலிருந்து விலகியிருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு ஏற்பட்ட வெடிப்பு, டோஹாவின் (Doha)
Legtaifiya பகுதியிலுள்ள ஹமாஸ் தலைவரின் அலுவலகம் மீது இஸ்ரேல் ஆட்சி நடத்திய தாக்குதல் என்பதை கட்டார் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கட்டார் ( Qatar ) அதிகாரிகளால் வெளியிடப்பட்ட உண்மையான ஆதாரங்கள் மூலம் தற்போதைய ஆகக்கடைசி நிலவரங்களை எப்போதும் பின்பற்றுமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலைமை இப்போது முழு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு, கட்டார் வான்வெளி மூடப்படாது என்று அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக டோஹாவிலுள்ள (Doha) மலேசியத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
உதவிகள் தேவைப்படும் மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.