
கோலாலம்பூர், ஜூன் 10 – எந்தவொரு சாலையிலும் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக கனரக வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டை கட்டாயமாக வரையறுக்கும்
கொள்கையை தற்போது அரசாங்கம் வரைந்து வருகிறது. இந்த செயல்திட்டம் அமலுக்கு வந்தவுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக தடுப்பதற்கான அனைத்து கொள்கையும் ஆராயப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
சாலையில் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்தும் தனது முயற்சிகளை அரசாங்கம் நிறுத்துவிடாது என்றும் அவர் கூறினார். குறிப்பாக பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களின் மிரட்டல்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற தவறும் கனரக வாகனங்களிலிருந்து சாலை பயனர்களை பாதுகாக்கும் கடப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம் என அந்தோனி லோக் கூறினார்.