Latestமலேசியா

கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு; வளர்ச்சி என்ற பெயரில் நடந்த துரோகம்; சார்ல்ஸ் சாந்தியாகோ தாக்கு

கிள்ளான், நவம்பர்-13,

கிள்ளான், கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம், “வளர்ச்சி என்ற பெயரில் நடந்த துரோகத்தின் சான்று” என, அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ கடுமையாக சாடியுள்ளார்.

3 தலைமுறைகளாக அந்த அரசாங்க தரிசு நிலத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு, நிலம் விற்கப்பட்டதும் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த நிலம் தனியார் மேம்பாட்டாளருக்கு விற்கப்பட்டு, இன்று 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

இது பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

‘புறம்போக்குக்’ குடியிருப்பாளர்கள் என சித்தரித்து இப்படி மக்களின் வாழ்வை சட்டபூர்வமாக அழிப்பதானது, அவமானதாக அமைந்து விடும் என சார்ல்ஸ் கவலைத் தெரிவித்தார்.

இவ்வேளையில், வீடுகள் உடைக்கப்படுவதை எதிர்த்து போலீஸாருடன் பேச்சுவார்த்தைக்குச் சென்ற மனித உரிமைப் போராட்டவாதியும் PSM கட்சித் துணைத் தலைவருமான எஸ். அருட்செல்வன் உட்பட மூவர் கைதாகியுள்ளனர்.

“மக்கள் வாழும் உரிமையை காக்கும் போராளிகள் கைது செய்யப்படுகிறார்கள், ஆனால் வாக்குறுதியை மீறியவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்” தனது X தளத்தில் சார்ல்ஸ் கொந்தளித்தார்.

சுமார் 100 குடும்பங்கள வீடற்றவர்களாகி விடுவார்கள் என்ற அச்சத்தை முன்வைத்து, மறுமேம்பாட்டுத் திட்டத்திற்காக அக்கிராமத்தில் காலியாக உள்ள வீடுகளை இடிப்பதை நிறுத்துமாறு, முன்னதாக சார்லஸ் சாந்தியாகோவும் PSM கட்சியினரும் மாநில அரசை வலியுறுத்தினர்.

அதே சமயம், காலியாக உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டுமே இடிக்கப்படும் என்றும் அக்டோபர் 23 ஆம் தேதி மாநில அரசு கூறியிருந்தது.

ஆனால், திடீரென அக்டோபர் 27-ஆம் தேதி, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு புதிய அறிவிப்பைப் பெற்றனர்.

இதையடுத்து, அதில் தலையிட்டு வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் அவர்கள் முறையிட்டனர்.

எனினும், நேற்று பெரும் பிரச்னைக்கு மத்தியில் வீடுகள் இடிக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!