
கோலாலம்பூர், செப்டம்பர்-23,
ஆடை மற்றும் நடத்தை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் கலைஞர்களுக்கே பொருந்தும், பார்வையாளர்களுக்கு அல்ல என, வெளிநாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கும் குழுவான Puspal தெளிவுப்படுத்தியுள்ளது.
The Star வெளியிட்ட செய்தியால் – பார்வையாளர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ எழுந்த குழப்பத்துக்குப் பிறகு இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், என்னதான் விதிகள் கலைஞர்கள் மீது கவனம் செலுத்தினாலும், பார்வையாளர்களின் ஒழுக்கமும் கடைசியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும் என்பதை, அதன் துணைத் தலைமைச் செயலாளர் Nik Kamaruzaman Nik Husin கூறினார்.
மலேசியாவின் பன்முக கலாச்சார மரியாதையும் தேசிய ஒற்றுமையும் பாதுகாப்பதே இந்த ஆடைக் கட்டுப்பாட்டின் நோக்கம்.
மேலும், மதுபானம் மற்றும் போதைப் பொருள் தொடர்பான செயல்பாடுகளை கட்டுப்படுத்த கலைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடமையுடன் செயல்பட வேண்டும் என்றும் Puspal நினைவுறுத்தியது.