Latestமலேசியா

‘காதல் நிகழ்ச்சி’ ஆபாசமான செயல்களை, அநாகரீக நடத்தையை ஊக்குவிக்கிறதா? ஏற்பாட்டாளர்கள் மறுப்பு

கோலாலாம்பூர் – ஜூலை-15 – கடந்தாண்டு eHati திருமண ஊக்குவிப்பு திட்டத்தை ஏற்பாடு செய்த நிறுவனம், அந்நிகழ்வு ஆபாசமான செயல்களையும் அநாகரீக நடத்தையையும் ஊக்குவித்தாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

அத்திட்டம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை – அவதூறானவை என, eHati International Sdn Bhd-டின் நிறுவனர்களான Diyana Tahir, Rahim Shukor இருவரும் அறிக்கையொன்றில் கூறினர்.

குறிப்பாக, eHati திட்டம் இஸ்லாமிய நம்பிக்கையை சிறுமைப்படுத்தவோ அல்லது மதத்தின் கொள்கைகளுக்கு முரணான கூறுகளை ஊக்குவிக்கவோ இல்லையென அவர்கள் கூறிக் கொண்டனர்.

மாறாக, உணர்ச்சி மற்றும் உளவியல் சவால்களைச் சமாளிக்கப் பெண்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஒவ்வொரு eHati திட்டமும் தெளிவான குறிக்கோள்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது; இஸ்லாமிய போதனைகளோ அல்லது சமூகப் பொறுப்புகளோ அதில் புறக்கணிக்கப்படவில்லை என அவர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆபாசமான செயல்கள், பொது ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய குற்றவியல் சட்டங்களின் கீழ் அந்நிகழ்ச்சி விசாரிக்கப்பட்டு வருவதாகக் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Hussein Omar Khan) நேற்று கூறியிருந்தார்.

அவ்வகையில், கடந்தாண்டு செப்டம்பர் 27 முதல் 30 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்படுமென்றும் அவர் சொன்னார்.

மலாய்க்காரர்களைக் குறி வைத்து ஷா ஆலாமில் நடத்தப்பட்ட அந்நிகழ்வில் சுமார் 50 பெண்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியின் இறுதி நாளில் ஒரு பெண் பேச்சாளர் உள்ளாடை மட்டுமே அணிந்து உள்ளே நுழைந்து பங்கேற்பாளர்களை முகம் சுளிக்க வைத்ததாகவும், பின்னர் நிர்வாண கோலத்தில் குழு உறுப்பினர்களுடன் நடனமாடத் தொடங்கியதாகவும், முன்னதாக ஃபேஸ்புக் பதிவு வைரலானது.

பங்கேற்பாளர்களைப் பின்பற்றும்படி ஊக்குவித்ததோடு, அவர்களுக்கு மர்ம பானம் கொடுத்து, அவர்களின் ஆடைகளைக் கழற்றியதாகவும் தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!