
செர்டாங், டிசம்பர்-30 – குற்றவியல் வழக்கில் ஆதாரங்களாகப் பறிமுதல் செய்யப்பட்ட 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு பொருட்களை, செர்டாங் போலீஸ் இன்று அழித்தது.
283,872 சிகரெட் பெட்டிகள், 53,691 டின்கள் மற்றும் மதுபான பாட்டில்கள், 178 சூதாட்டப் பொருட்கள், 353 பிட்காயின் இயந்திரங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
அவை மொத்தம் 673 விசாரணை அறிக்கைகளை உள்ளடக்கியவை என, செர்டாங் போலீஸ் தலைவர் Muhammad Farid Ahmad செய்தியாளர்களிடம் கூறினார்.
போலீஸ் படைத் தலைவரின் நிரந்தர உத்தரவு மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவின் கீழ் அப்பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
விசாரணைகள் முடிந்த பிறகு, நீதிமன்றம் அல்லது அதிகாரிகளின் உத்தரவுப்படி, ஆதாரங்கள் தொடர்ந்து இருப்பதைத் தவிர்க்கவும், எதிர்காலத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் ஏதுவாக, அவற்றை அழிப்பது அல்லது அப்புறப்படுத்துவது வழக்கமாகும்.



