Latestமலேசியா

கைவிடப்பட்ட்ஃ 2 குழந்தைகளின் உறவினரைத் தேடும் பினாங்கு சமூக நலத்துறை

ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-18 – பினாங்கில் இரு குழந்தைகளின் உறவினரைச் சமூக நலத்துறை தேடி வருகிறது.

டிசம்பர் 2-ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் குடிநுழைவுச் சோதனையில் Zaki எனும் 3 வயது குழந்தை கண்டுபிடிக்கப்பட்டான்.

அவனைப் பராமரித்தவர் இந்தோனேசியர் ஆவார்; அவனுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை.

இந்நிலையில் 2001 சிறார் சட்டத்தின் கீழ் அவன் தற்காலிக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

எனவே உறவினர்கள் செபராங் பிறை தெங்கா சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வேளையில், 9 மாத பெண் குழந்தையொன்றின் பெற்றோர் அல்லது உறவினர்களும் தேடப்படுகின்றனர்.

மார்ச் 12-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அக்குழந்தையை பிரசவித்த இந்தோனேசியத் தாய் பின்னர் தலைமறைவாகி விட்டார்.

PRS எனப்படும் ஒருவகை முக அமைப்பு கோளாறுடன் பிறந்துள்ள அக்குழந்தை, இன்னமும் செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.

எனவே அக்குழந்தையின் உறவினர்கள் அல்லது தகவல் உள்ளவர்கள் சமூக நலத்துறையை தொடர்பு கொள்ளுமாறு JKM கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!