Latestமலேசியா

சிரம்பான் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது

சிரம்பான், டிசம்பர் 11 – நேற்று காலை, போர்ட்டிக்க்சன் டோல் பிளாசா அருகே, ஜாலான் ராசாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் இருவரை போலிஸ் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதென்று சிரம்பான் மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Azahar Abdul Rahim கூறியுள்ளார்.

கைதானவர்களில் ஒருவன் கடந்த ஏப்ரலில் நடந்த மற்றொரு கத்தி குத்து வழக்குடன் சம்பந்தப்பட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மற்றொருவர் தீவிர காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவ்விரு சந்தேக நபர்களையும் போலீசார் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ்
விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!