
பஹாவ், அக்டோபர் 30 –
நெகிரி செம்பிலான் பஹாவ், கம்போங் தாமான் ஜெயா பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சிறிய ’roundabout’ அதாவது வட்டச்சாலைக்கு அரை கோடி ரிங்கிட் செலவிடப்பட்டதாக கூறப்பட்டதில் உள்ளூர் மக்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளதைத் தொடர்ந்து கடும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
இது வட்டச்சாலையா அல்லது சந்திரனை நோக்கிய பணி திட்டமா என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து இத்திட்டத்தை முன்னிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்
பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ சஞ்சீவன் ராமகிருஷ்ணன்.
அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளான சீரான சாலை, நன்றாக இயங்கும் வடிகால் அமைப்பு, மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத போது இந்த அரைகுறையான வட்டாசாலை திட்டமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வட்டச்சாலை திட்டத்தின் ஒப்பந்தம் யாருக்கு வழங்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
அதிகாரிகள் தளத்துக்கு வந்து மக்களிடமிருந்து நேரடியாக தேவைகளை அறிந்து செயல் பட வேண்டும். இல்லையேல் “மக்கள் நல திட்டம்” என்ற பெயரில் நடக்கும் இத்தகைய செலவுகள் மக்களின் நம்பிக்கையை மட்டுமே சிதைக்கும் என சஞ்சீவன் குறைபட்டுக் கொண்டார்



