Latestமலேசியா

செப்பாங்கில் பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில் சீன நாட்டு மாணவன் மரணம்

செப்பாங், ஜூலை-27 – சிலாங்கூர், செப்பாங்கில் தனியார் பல்கலைக்கழக தங்கும் விடுதி அறையில், சீனாவைச் சேர்ந்த 20 வயது மாணவன் இறந்துகிடந்தான்.

நேற்று காலை 6 மணிக்கு மேல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவன் மயங்கி விழுந்துள்ளான்.

அவசரத் தகவல் கிடைத்து வந்த மருத்துவக் குழு அம்மாணவன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.

அம்மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையென்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, செப்பாங் போலீஸ் தலைவர் Norhizam Bahaman கூறினார்.

சடலம் சவப்பரிசோதனைக்காக செப்பாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

அதில், நுரையீரல் இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பே அம்மாணவன் மரணமடையக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!