
ஓகியோ, டிச 11 – ஜப்பானை ரெக்டர் கருவியில் 7.5 அளவில் தாக்கிய நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள வேளையில் எதிர்வரும் நாட்களில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். டிசம்பர் 8 ஆம் தேதி வடக்கு அமோரி (Amori ) மாநிலத்தின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதோடு , சாலைகளும் சேதமடைந்தன. அதோடு பாதிக்கப்பட்ட பகுதியில் 70 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்தன.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 51 ஐ எட்டியுதாக நாட்டின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டதாக ஒரு நாளைக்கு முன்பு ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி
( Sanae Takaichi ) அறிவித்ததைவிட இப்போதைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் பெரிய அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்படும் என இதற்கு முன் டிசம்பர் 9ஆம்தேதி ஜப்பான் வானிலைத்துறை எச்சரித்திருந்தது. அந்த வட்டாரத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டால் பெரிய அளவில் சுனாமி ஏற்படும் என்று எச்சரிகையும் விடுக்கப்பட்டிருந்தது.



