
ஜோகூர் பாரு, டிசம்பர் 23-ஜோகூர் பாருவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பேருந்து மோதிய விபத்தில் இரு முதியவர்கள் உட்பட மூவர் காயமடைந்தனர்.
மாநகரை நோக்கிச் செல்லும் Jalan Skudai – Pantai Lido சாலையின் 3.5-ஆவது கிலோ மீட்டரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டது.
ஸ்கூடாயிலிருந்து 64 வயது நபர் ஓட்டிச் சென்ற பேருந்து, சாலையோரம் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கவனிக்கத் தவறி, அதன் பின்புறத்தின் வலது பக்கத்தில் மோதியது.
இதில் பேருந்திலிருந்த பயணிகளில் மூவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பேருந்து ஓட்டுநருக்கு காயமில்லை.
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீஸார் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



