Latestமலேசியா

தொழிற்நுட்ப கோளாறினால் MyTNB செயலியில் ஜூலை மாத பில் வாசிப்பு சரியாக இருக்காது – TNB

கோலாலம்பூர் – ஜூலை 8 – தொழில்நுட்பக் கோளாறு காரணமாக MyTNB செயலியில் ஜூலை மாத பில் வாசிப்பு தவறாகக் காட்டப்படுவதாக Tenaga Nasional Bhd (TNB) தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்திற்கான மின்சார பயனிட்டு அளவிடு வரைபடத்தின் காட்சியைப் பாதித்த பிழையை TNB வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் விளைவாக, இந்த மாதத்திற்கான பயனிடு அளவிடு பயன்பாட்டில் கிடைக்கவில்லை. சில வாடிக்கையாளர்கள் MyTNB செயலியில் ஜூலை மாதத்திற்கான வழக்கத்திற்கு மாறாக அதிக மின்சார பயன்பாடு அளவிட்டைக் கவனித்திருக்கலாம் என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டது, மேலும் அவர்களின் ஜூலை மாத பில் வாசிப்பு பாதிக்கப்படவில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு தெனாகா நேசனல் உறுதியளித்தது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பில்லிங் காலத்திற்குப் பிறகு தங்கள் இறுதி பில்லைச் சரிபார்க்கலாம். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவ்வப்போது அண்மைய மேம்பாடுகள் குறித்த புதுப்பிப்புகளை வழங்குவதாகவும் TNB தெரிவித்துள்ளது. மேல் விவரங்களுக்கு Facebook TNB Careline, மின்னஞ்சல் அல்லது 1300-88-5454 என்ற ஹாட்லைன் உள்ளிட்ட கிடைக்கக்கூடிய தொடர்பு வசதிகள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் TNB ஐத் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!