
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 22 – மலேசிய குடும்பம் ஒன்று சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கழிக்க சென்றபோது Fayyadh என்ற சிறுவன் ‘snowtube’ எனப்படும் பனி விளையாட்டின் போது பனி தாக்குதலால் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.
அருகில் இருந்த இதர சுற்றுலாப் பயணிகள் அச்சிறுவனுக்கு உடனடியாக உதவி செய்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ பணியாளர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நான்கு மணி நேர கவனிப்புக்குப் பிறகு தற்போது அந்த சிறுவன் நலமாக இருப்பதாக அவர் தாயார் தெரிவித்தார்.



