
பாச்சோக், நவம்பர் 19 – கடந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று, பாச்சோக்கில், ஆண் குரங்கு ஒன்றிற்கு நடந்த சித்திரவதையை முன்னிட்டு குற்றச்சாட்டப்பட்ட இரண்டு சகோதரர்கள் பாச்சோக் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளனர்.
அவ்விரு சந்தேக நபர்களும் நவம்பர் 1 ஆம் தேதியன்று பச்சோக் ‘Kampung Jembal’ இல் ஆண் குரங்கை தட்டி அதனை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.
விலங்குகள் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவ்விருவரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 5,000 ரிங்கிட் ஜாமீனும் ஒரு பிணை காப்பாளர் இருக்க வேண்டுமெனவும் நிர்ணயித்தது. மேலும், இந்த வழக்கு டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



