Latest
மனாலியில் காட்டப்பட்ட ‘போலி ஐஸ் பாயிண்ட்; ஏமாற்றத்தில் திளைத்த சுற்றுலா பயணிகள்

மனாலி, டிசம்பர் 13 – பிரபல சுற்றுலா தளமான மனாலியில் அதிர்ச்சி தரும் மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையான பனி இருப்பதாக கூறி, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய பகுதியை ‘ஐஸ் பாயிண்ட்’ என காட்டியுள்ளனர்.
பனி இல்லை என்பதை அறிந்த பயணிகள் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இத்தகைய செயல்கள் மனாலியின் பெயருக்கு களங்கம் என பலரும் விமர்சித்துள்ளனர்.



