Latestமலேசியா

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஷேய்க் ஹசினாவுக்கு மரண தண்டனை

கோலாலம்பூர், நவ 17 – மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வங்காளதேச முன்னாள் பிரதமர் Sheikh Hasina வுக்கு அந்நாட்டின் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் தலைமையிலான எழுச்சியை கடுமையாக ஒடுக்க உத்தரவிட்டதற்காக ஹசீனா குற்றவாளி என்று தீர்ப்பாயம் மூன்று குற்றச்சாட்டுகளில் தீர்ப்பளித்தது.

ஹசினாவின் இரண்டு உதவியாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் அசடுஷாமான் கான் கமால் ( Asaduzzaman Khan Kamal ) மற்றும் முன்னாள் போலீஸ் தலைவர் சௌத்துரி அப்துல்லா அல் -மாமுன் ( Chowdhury Abdullah Al – Mamun ) ஆகியோர் மீதும் இதே குற்றங்களுக்காக நீதிபதி முகமட் கோலம் மோர்துசா மஜும்டெர் ( Mohd Golam Mortuza Majumder ) தலைமையிலான மூவர் கொண்ட தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

நாடு முழுவதும் போராட்டக்காரர்களைக் கொல்லும் பொருட்டு அட்டூழியங்களைச் செய்ய மூன்று குற்றவாளிகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்ததாக அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தீர்ப்பாயத்திடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோரிய முன்னாள் போலீஸ் தலைவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஹசீனா மற்றும் கமால் ஆகியோர் தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் விசாரிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மாமுன் தொடக்கத்தில் நேரில் விசாரணையை எதிர்கொண்டு பின்னர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!