
தெமர்லோ, பஹாங், டிசம்பர் 3 – போலி முதலீட்டு திட்டத்தில் மக்களை ஏமாற்றிய எட்டு சீனர்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியன்று Triang பகுதியில் உள்ள GS Bera Hotel-ல் போலீசார் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். மேலும் 2 மடிக்கணினிகள் மற்றும் 19 கைப்பேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மோசடி மையமாக செயல்படுத்தப்பட்டு வந்த அந்த ஹோட்டலில், சந்தேக நபர்கள் Telegram மூலம் சீனாவில் உள்ள மக்களை தொடர்பு கொண்டு, நிதி ஆலோசகர் அல்லது முதலீட்டு அதிகாரி போல நடித்து ஏமாற்றியதைப் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் மீது முதலீட்டு மோசடி மற்றும் விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்தது என இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றம் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள் அனைவருக்கும் தலா 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்தது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்தாண்டு ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



