Latestமலேசியா

விடைபெற்று, மலேசியாவுக்கு நன்றி தெரிவித்த அஜித் குமார் ரேசிங் குழு; ஒழுங்கும் பொறுமையும் காட்டிய இரசிகர்களுக்கும் பாராட்டு

செப்பாங், டிசம்பர் 21-நெஞ்சார்ந்த நன்றியுடன் மலேசியாவில் தனது பந்தய பயணத்தை நிறைவுச் செய்துள்ளது அஜித் குமார் ரேசிங் அணி.

இதையடுத்து, செப்பாங் பந்தயத் தளம், Creventic, SRO, ACO, Sama Sama மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் இரசிகர்களுக்கு தனது சமூக ஊடகப் பதிவு வாயிலாக அவ்வணி நன்றி கூறியுள்ளது.

“நன்றி மலேசியா! விரைவில் மீண்டும் வர ஆசை” என உருக்கமான செய்தியுடன் அப்பதிவு பகிரப்பட்டுள்ளது.

14,000-க்கும் மேற்பட்ட likes-கள், நூற்றுக்கணக்கான பகிர்வுகள் பெற்ற இப்பதிவு, இரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2 வாரங்களாக செப்பாங் பந்தயத் தளத்தில் நடிகர் அஜித் குமாரின் வருகை பெரும் கூட்டத்தை ஈர்த்தது.

தங்களின் அபிமான நட்சத்திரத்தைக் காண இரசிகர்கள் திரண்டதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செப்பாங் களைக் கட்டியது.

அவரும் சளைக்காமல் இரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், ஒழுங்கு, பொறுமை, மரியாதை காட்டிய ரசிகர்களுக்கு அஜித் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

இது ஒரு பந்தயத்தின் முடிவல்ல, மலேசியாவுடன் உருவான உறவின் தொடக்கம் என வருணிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!