
தெமர்லோ, அக்டோபர்-27,
பஹாங், தெமர்லோவில் கதவைப் பூட்டாமல் வீட்டின் வரவேற்பறையில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த மாதுவின் தங்கச் சங்கிலியை கொள்ளையன் ஒருவன் பறித்துச் சென்றான்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தாமான் ஜெயாவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
கருப்பு தோல் மற்றும் முழுக்க முழுக்க கருப்பு உடையில் வீட்டுக்குள் புகுந்த திருடன், 50 வயது அம்மாதுவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, ஒரு ஸ்கூட்டரில் தப்பியோடினான்.
அம்மாது கையில் அணிந்திருந்த தங்கக் காப்பையும் அவன் பறிக்க முயன்றான், ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
சங்கிலியால் அறுபட்டதால் மாதுவின் கழுத்துப் பகுதி புண்ணாகி போன வேளை, தங்கச் சங்கிலி பறிபோனதால் அவருக்கு 10,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதே வீடமைப்புப் பகுதியில் ஏற்கனவே கைவரிசைக் காட்டியவன் என நம்பப்படும் சந்தேக நபருக்கு எதிராக போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் கூட, 78 வயது முதியவரின் தங்கக் காப்பு கொள்ளையிடப்பட்டுள்ளது.



