
கோலாலம்பூர், செப்டம்பர்-10 – ஆங்கில மொழியாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
மலேசியாவின் எதிர்கால போட்டித்தான்மைக்கு ஆங்கிலப் புலமை இன்றிமையாதது; எனவே அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம் தேசிய மொழியான மலாய் மொழியின் மாண்பும் தொடர்ந்து கட்டிக் காக்கப்பட வேண்டும்.
மக்களை ஒன்றுபடுத்தும் மொழியாக அது வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
தேசிய மொழி தெரியாத மலேசியர்களை ஏற்றுக் கொள்ள முடியாது; இது நம் மொழி , நாம் தான் இதனைப் போற்றி காத்திட வேண்டுமென அன்வார் சொன்னார்.
AmBank வங்கிக் குழுமத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா விருந்தில் உரையாற்றிய போது பிரதமர் அவ்வாறு கூறினார்.